நாகை: புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

76பார்த்தது
பொன்னூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமார் திறந்துவைத்தார். 

பொன்னூர் ஊராட்சி கட்டளைச்சேரி கிராமத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரின் 2022-2023-ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 17.50 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ச

ட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ராஜகுமார் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

இதில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ், திமுக ஒன்றிய செயலாளர் ஞான. இமயநாதன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் வேல்முருகன், ஜம்புகென்னடி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ரியாத்அகமது, ஊராட்சி துணைத் தலைவர் சேட்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சித் தலைவர் என். பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி