மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டியும் ஊர் செழிக்கவும் இன்று நவசக்தி ஹோமம் நடைபெற்றது.
96 குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, 1008 மூலிகைப் பொருட்களால் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் உபயோதாரரான ஜோதிடர் பழனி முருகன் மற்றும் பக்தர்கள் திரளானூர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.