வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம் பி

67பார்த்தது
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர் சுதா வெற்றி பெற்றார். இதனையடுத்து மயிலாடுதுறை மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் திறந்த வெளி வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், காங்கிரஸ் மாவட்ட தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி