மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்க பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு உபகரணங்களை கையாள்வது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.