மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமைத்தகடேஸ்வரர் ஆலயத்தில் மத்திய மின்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.