மயிலாடுதுறை நகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த போட்டியினை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆர் டி ஓ அர்ச்சனா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.