மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை தணிக்கை குழு உறுப்பினர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் செல்வன் தலைமை தாங்கினார்.
இதில் நகர செயலாளர் மார்க்ஸ் பிரியன் வரவேற்பு உரையாற்றினார். திராவிட முரசு முதல்நிலை பொறியாளர் செந்திலதிபன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.