மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சுதாகர் (43) கூராடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது குடித்துள்ளார். அப்போது, அங்கு மதுகுடிக்க சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ராஜா (46) டேபிளில் வைத்திருந்த சுதாகரின் மது பாட்டிலை கீழே தள்ளிவிட்டு உடைத்தாராம். இதில் ஏற்பட்ட தகராறில், சுதாகரை ராஜா கத்தியால் குத்தியுள்ளார். இதில், காயமடைந்த சுதாகர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.