கடந்த 21 ஆண்டுகளாக இயங்கி வந்த மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி விரைவு வண்டி இன்றுடன் விடைபெறுகிறது. இந்நிலையில் நாளை டிசம்பர் 28 முதல் புதிய வடிவத்தில் LHB பெட்டிகளுடன் புதிய ரயிலாக இயக்கப்பட உள்ளது.
பழைய பெட்டிகளுடன் ஒப்பிடும்போது LHB பெட்டிகளில் மூலம் பயணிகளுக்கு அதிக அளவிலான வசதிகள் கிடைக்கும் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.