மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் சிறு பாலம் கட்டுமான பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கொள்ளிடம் முக்கூட்டு செல்லும் வாகனங்கள் பிடாரி மேல வீதி, காந்தி பூங்கா சாலை வழியாக ஈவேரா சாலையில் சென்று பழைய பேருந்து நிலையத்தை கடந்து இடதுபுறம் செல்லும் பிடாரி வடக்கு வீதி வழியாக கொள்ளிடம் முக்கூட்டுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.