மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் அவ்வப்போது புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார செயற்கை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி எரிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.