மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்நாதன்.
இவர் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் சுகாதார ஆய்வாளரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.