மயிலாடுதுறை அருகே பனங்காட்டங்குடி பகுதியில் குளத்தில் முதலை ஒன்று இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு நேரத்தில் வெளியில் நடமாடுவதற்கு கூட அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சீர்காழி வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குளத்தில் இருந்த முதலையை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.