கொள்ளிடம் பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு புதியதாக குப்பை அள்ளும் வாகனங்கள் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கி பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் அனைத்து வாகனங்களும் பழுதடைந்து குப்பை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ஊராட்சிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அகற்ற முடியாத நிலையில் குவிந்து கிடக்கிறது. இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனங்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் இந்த வாகனங்கள் உடனடியாக வழங்கப்பட இருப்பதால் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் அனைத்து வகையான குப்பைகளையும் எளிதில் அகற்றப்படும் நிலை உள்ளது.