மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் "மீன் பிடிக்கும் தொட்டி" திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் பணிகள் மீன்பிடி துறைமுகத்தின் அருகில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆயிரக்கணக்கான தொட்டிகள் தயார் செய்யப்பட்டு கடலில் இறக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான கடல் காற்றின் காரணமாக மீன்கள் திசை மாறிவிடுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் அதிக மீன்கள் கிடைக்கும் என்று தரங்கம்பாடி மீனவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.