மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குத்தாலம் ஆதிசங்கர் பேரவை, சங்கரா அறக்கட்டளை, பாண்டிச்சேரி கண் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமில் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.