மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம், வெள்ளி பாலாடை மற்றும் புத்தாடை உள்ளிட்டவை என்று வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் மெய்ய நாதன், பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.