மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடாரம்கொண்டானில் சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடமிருந்து அதிக பணமோ கூடுதல் எடையோ வைக்க கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.