மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மேலும் இதில் மாற்று திறனாளிகளை அலக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு, தமிழ் பேசும் மேலாளர் நியமனம் செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.