நாகப்பட்டினம்: அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

77பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களின் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 173 மனுக்கள் பெறப்பட்டு நான்கு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு மாற்றுத்திறனாளி அட்டை இரண்டு பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் இரண்டு பேருக்கும் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் 40 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருமால், வட்டாட்சியர் வடிவழகன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி