இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம்

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 30 வது கிளை மாநாடு கடவாசல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த கிளை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

கட்சி கிளை நிர்வாகிகள் சிவராமன், வீரராஜ், சுந்தர் நீதி சோழன், பிரபாகரன், தமிழ் மலர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த கிளைக் கூட்டத்தில் தேர்தல் மற்றும் ஊராட்சி வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி