மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் 100% குப்பைகளை பிரித்து வழங்குதல் மற்றும் வகைப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.