மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகர் கௌதமி சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சிக்க ஆதம் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை, பெரியவர்களுக்கு மரியாதை தருவது எப்படி என்பது அடிப்படையான விஷயம், அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.