ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நாகை சரக பால்வளத்துறை முதல் நிலை ஆய்வாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆவின் விரிவாக்க அலுவலர் செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் வவ்வாலடியில் ஆவின் பால் புதிய கிளை தொடங்குவது, ஆவின் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் பெற உதவி செய்வது, ஆவின் பால் கொள்முதல் செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டுவது, பால் தரம் அளவிடும் கருவி வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் ரேணுகா, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி