மயிலாடுதுறை பெரிய நாகங்குடி மாரியம்மன் கோவில் தேர்வை சேர்ந்தவர் குருமூர்த்தி (41). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் இவர் தனது நண்பர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். இது குறித்து இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் உடைந்த குருமூர்த்தி பூச்சிக்கொல்லி மருந்தை குறித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குருமூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.