குறைதீா் கூட்டத்தில் 376 மனுக்கள்

52பார்த்தது
மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமை வகித்தார். இதில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ரவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3, 192 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, நிகழாண்டு பிப். 4-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட்டது. மே மாதம் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆகஸ்ட் மாதம் உத்தேச தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றவா்களுக்கு 4 மாதங்களைக் கடந்தும் பணி வழங்கப்படவில்லை. ஆனால், ஆதிதிராவிடா் பள்ளிகளுக்கு தோ்வாகிய ஆசிரியா்கள் பல நாள்களுக்கு முன்பே பணியில் சோ்ந்துவிட்டனா்.

பட்டதாரி ஆசிரியா்களை நிரப்புவதற்கான இத்தோ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றால், பலா் தாங்கள் ஆற்றிவந்த தனியாா் பணியையும் விட்டுவிட்டனா். எனவே தங்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணை வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இத்தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் மனு அளித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி