நாகப்பட்டினம் - Nagapattinam

நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல்துறையினரின் வீடியோ

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்டநெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு வரும் பொதுமக்களுக்கு முழுசோதனைக்குப் பின்னரே மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கான வண்டியில் அமரவைத்து மனுநிலைக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று தேவையான உதவிகளை செய்து வரும் காவல்துறையின் அறிவிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் தற்போது பரவி வருகிறது

வீடியோஸ்


நாகப்பட்டினம்