
நாகை: பெருமாள் கோயிலுக்கு 8 கிலோ தங்கம்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மூலவர் விமானத்துக்கு செப்புத்தகடு வேய்ந்து தங்க ரேக்குகளை பொருத்தும் பணிகளுக்கு உபயதாரர்கள் ஆர். ஹரி மற்றும் ஆர். குகன் ஆகியோர் சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் (ஜனவரி 3) வழங்கிய 8 கிலோ 405 கிராம் தங்கக் கட்டிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பெற்றுக்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ரா. சுகுமார், ந. திருமகள், சி. ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ரா. வான்மதி, வி. குமரேசன் அலுவலர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.