நாகப்பட்டினம் - Nagapattinam

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் மின்வாரியத்தை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகள் கைவிட வேண்டும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை 12 தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திட்ட தலைவர் என். வெற்றிவேல் தலைமை தாங்கினார் ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Jun 28, 2024, 16:06 IST/கீழ்வேளூர்
கீழ்வேளூர்

200 பனை மரங்கள் வெட்டப்பட்டதற்கு கண்டனம்

Jun 28, 2024, 16:06 IST
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் பகுதியில் வெண்ணாறு வழிநில கோட்டத்திற்கு உட்பட்ட வெட்டார் மற்றும் ஓடம்போக்கி வாய்க்காலில் பிரியக்கூடிய நண்டுகனி வாய்க்காலில் பொதுப்பணித் துறையின் நீர்வள துறையின் மேற்பார்வையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது இந்த வாய்க்காலில் தேசிய சின்னமான பனைமரம் 200 வெட்டப்பட்டு வயல்களில் வீசி எறியப்பட்டுள்ளது தமிழக அரசின் வேளாண்மை துறை பனைமரம் வெட்ட தடை விதித்திருக்கும் நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீரளத்துறை அலட்சியத்தால் பனைமரம் வெட்டப்பட்டதை கண்டு விவசாயிகளும் சா சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்