நாகப்பட்டினம் - Nagapattinam

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சந்தானம், நாகப்பட்டினம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பு முத்து, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் துர்க்கா ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சார்ந்த செயல்பாடுகளை விளக்கி கூறினர். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பரிட்சையை பார்வையிட்டு கல்வி பற்றிய கருத்துக்களை வழங்கினார். இதில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Jun 30, 2024, 16:06 IST/மயிலாடு துறை
மயிலாடு துறை

துறவறம் மேற்கொள்ள உள்ள ஜெயின் தம்பதியினர்

Jun 30, 2024, 16:06 IST
மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44)-பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின் துறவி ஆச்சாரிய குரு ராம்முனி முன்னிலையில் துறவு மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை நகரில் வசிக்கும் 120 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 500-க்கு மேற்பட்ட ஜெயின் சமூக மக்கள் துறவு மேற்கொள்ள உள்ள தம்பதியினரை அவர்களது இல்லத்தில் இருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பக்தி பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து, மகாதானத்தெருவில் உள்ள தனியார் திருமணக்கூடம் ஒன்றில் அவர்களை போற்றி, பக்தி பாடல்களை பாடி மரியாதை செலுத்தினர். இல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, வீடு, சொத்து, குடும்பம், உறவுகளை விடுத்து துறவு வாழ்க்கையில் ஈடுபடவுள்ள தம்பதியினருக்கு மயிலாடுதுறை அனைத்து ஜெயின் சங்கங்கத்தினர் இணைந்து இந்த மரியாதையை செலுத்தினர்.