

நாகை: அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டறிக்கை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டறிக்கை வழங்கி புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் விழிப்புணர்வு: நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், தம்பிதுரை பூங்கா, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அமைப்பு செயலாளரும் நாகை மாவட்ட செயலாளருமான ஓ எஸ் மணியன் அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.