மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் கைது செய்தனர்

61பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வாசுகி (வயது 59). இவர் கடந்த மாதம் 27ம் தேதி அதிகாலை பாப்பாகோவிலில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு ஆட்டோவுக்காக நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் வந்ந இளைஞர் உங்க ஊருக்குதான் செல்கிறேன் என கூறி மூதாட்டியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மூதாட்டிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் புதுச்சேரி மெயின் ரோடு அருகே வரும் போது அந்த இளைஞரிடமிருந்து தப்பிப்பதற்காக வாகனத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கீழ்வேளூர் போலீசில் புகார் செய்தனர் மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது பாப்பா கோவில் அருகே பெரிய நரியங்குடி பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பதும் பாப்பாகோவிலில் சலூன் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது..
. இந்நிலையில் தனிப்படை போலீசார் இன்று சிக்கல் கடைத்தெருவில் நின்றிருந்த குமரவேலுவை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி