நாகையில் மத்திய நிதியமைச்சரை கண்டித்து தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினை கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் விஸ்வகா்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை, பாரம்பரிய தொழிலும் அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு விஸ்வகா்மா கைவினை கலைஞா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
அந்தவகையில், மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினை கலைஞா்கள் சங்கம் சாா்பில் நாகையில் மாநில துணைத் தலைவா் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய நிதியமைச்சரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.