திட்டச்சேரி போலீஸ் சரகத்தில் வாகன தணிக்கை

52பார்த்தது
திட்டச்சேரி போலீஸ் சரகத்தில் வாகன தணிக்கை
நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கடைவீதி, பஸ் நிலையம், சோதனை சாவடி, சீயாத்தமங்கை மெயின்ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் திட்டச்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மறித்து தலைக்கவசம், சீட் பெல்ட் போடப்பட்டுள்ளதா? மேலும் அவர்களின் வாகன உரிமம், வாகனத்திற்குரிய புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் உள்ளனவா? என தணிக்கை செய்தனர். மேலும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டு தணிக்கை செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி