நாகையில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

78பார்த்தது
ஒன்றிய அரசின் மீன்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும், மீனவர்களை நேரடியாக சந்தித்து கள ஆய்வு நடத்தவும் சாகர் பரிக்கிரமா நிலை 9 என்ற பெயரில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்று ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன்படி நேற்று ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம்ரூபாலா, இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தலைமையில் வேளாங்கண்ணி அருகே செருது£ர் மீனவ கிராமத்திற்கு வந்தனர். பின்னர் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அப்போது ஒன்றிய அரசின் மீன்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்தனர். இதை தொடர்ந்து மீனவர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அப்போது மீனவர்கள் சமுதாயத்தை பழங்குடி இனத்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒன்றிய அரசின் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட மீனவ கிராமத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். மீனவர்கள் அச்சம் இன்றி ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க ஒன்றிய அரசு வசதிகள் செய்து தர வேண்டும். மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி