ஒன்றிய அமைச்சர் பேச்சு

74பார்த்தது
நாகை துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்த ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் பர்ஷோத்தம்ரூபாலா பேசியதாவது: மீனவர்களுக்கு என்ற தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு என அமைச்சர்களை நியமித்து நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவே சாகர்பரிக்கிரமா என்ற பெயரில் கடலோர மாவட்டங்களுக்கு சென்று வருகிறோம். இதன்படி இன்று நிலை 9ன்படி ஆய்வு செய்யப்பட்டத்தில் பராம்பரிய மீன்பிடி கிராமங்கள் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்தாக தெரிவித்தனர். இது குறித்து கலந்தாய்வு செய்து விரைவில் நிவர்த்தி செய்யப்படும். தென்னிந்திய மீனவர்கள் தங்களது கோரிக்கையை இணை அமைச்சர் எல். முருகன் வாயிலாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு எனது கவனத்திற்கு வரும் மீனவர்கள் சார்ந்த கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார். இதை தொடர்ந்து மீனவர் மற்றும் மீனவ சமுதாய மகளிர்களுக்கு விவசாய கடன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி