குளம் போல் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

52பார்த்தது
தெற்கு பால்பண்ணைச்சேரி ஸ்ரீ ஜெயபத்ர காளியம்மன் கோவில் முகப்பில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி கோவில், மற்றும் ஏடிஎம் வாசலில் குளம் போல் தேங்கி நிற்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

நாகை நாகூர் சாலையில் தெற்கு பால்பண்ணைச்சேரி ஸ்ரீ ஜெயபத்ர காளியம்மன் கோவில் அருகே குடியிருப்புகள் தனியார் கல்லூரி ஏடிஎம் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இது வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வாகனம் மூலமும் நடந்தும் சென்று வருகின்றனர் கோவில் முகப்பில் பாதாள சாக்கடை கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி கோவில், மற்றும் ஏடிஎம் வாசலில் குளம் போல் தேங்கி நிற்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், பணம் எடுக்க ஏடிஎம்முக்கு வரும் பொதுமக்கள் கழிவுநீரை கால் வைக்க முடியாமல் துர்நாற்றத்தால் அங்கிருந்து மேலும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகளும் வணிக நிறுவனங்களில் பணிபுரிவுகளும், காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி செல்பவர்களும் அவதி அடைந்துள்ளனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி