போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

1பார்த்தது
நாகையில் தமிழகத்தின் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி: பேரணியாக சென்று ஆட்சியில் அலுவலகம் முன்பு அஞ்சலி.

நாகப்பட்டினம் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த 59 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து விவசாயிகளுக்காக தமிழகம் முழுவதும் போராடி உயிர் நீத்த விவசாய போராளிகளுக்கு மெழுகுவத்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :