நாகப்பட்டினம் அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் செயல்படும் விடுதியில் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின் படி இன்று காலை அதிகாரிகள் விடுதியில் சென்று ஆய்வு அங்கிருந்த சமையலறை மற்றும் சமையல் பொருட்கள் வைப்பு அறையிலும் ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் இது போன்ற குற்றங்களை தடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.