நாகூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

65பார்த்தது
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

நாடு முழுவதும் 30 நாட்கள் நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டத்தை தொடங்கினர். அதன்படி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள நவாப் பள்ளியில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்த வந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகைதந்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்களிலும், தர்காகளிலும் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி