வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

56பார்த்தது
வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாதம் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி