மத்திய அரசுக்கு சமூக செயல்பாட்டாளர் காளியம்மாள் கண்டனம்

81பார்த்தது
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ; நடிகைகள், தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென காளியம்மாள் கோரிக்கை. விடுத்தார்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காளியம்மாள் கூறுகையில் ; காவிரி மேலாண்மை வாரியத்தை சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும், நாகை மாவட்ட பனங்குடி கிராம விவசாயிகளுக்கு மறுவாழ்வு மேல் குடியமர்வு எழுப்பிட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசியில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் நடிகைகள் மற்றும் தொழிலதிபர்களின் கடன்களை ரத்து செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி