நாகப்பட்டினம், வெளிப்பாளையம், மருத்துவமனை சாலை, நல்லையன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின் படி இன்று காலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட இரு கடைகளுக்கு நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ரூபாய் 25, 000 அபராதம் விதித்து கடைகளை பூட்டி சீல் வைத்தார். மேலும் மற்ற கடைகளுக்கும் இதுபோல் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.