நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மைகூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயசங்கபிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நாகை காடம்பாடி, சங்கமங்கலம், பாலையூர், அழிந்த மங்களம், செல்லூர், பாப்பாக்கோவில், ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீதும், பன்றிகள் வயல்வெளிகளுக்கு வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவி;ல்லை. எனவே தற்போது பயிர்கள் கதிர்ஆகி வெளியே வரும் நிலையில் அவற்றை சேறோடும், சகதியோடும் பனறிகள் புகுந்து நாசம் செய்து வருகிறது. இது போல வயல் வரப்புகளும் உடைத்து தள்ளிவிடுவதால் வயல்களில் தண்ணீர் தேக்கி பயிர்களை காப்பாற்ற முடியாமல் உள்ளது. விவசாயிகள் உயிராக வளர்க்கும் பயிர்களை உயிரிழக்க செய்யு;ம பன்றிகளை காலதாமதம் இன்றி உடனடியாக பிடித்தால் மட்டு;மே பயிர்கள் பாதுகாக்கப்படும். இல்லாத பட்சத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பன்றிகளால் பாதிப்படைந்து விவசாயிகள் பெரும் நக்ஷ்டம் அடைவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயத்திற்கு பாதிப்பைஏற்படுத்தும் பன்றிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை வி: டுத்தனர்.