கணக்கெடுப்பு பணி நடத்த கோரிக்கை:

53பார்த்தது
நாகை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் உள்ளது. ஆற்றுப் பாசனத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியுள்ள காவிரி கடை மடையான இம்மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் சாகுபடி தவிர்த்து ஊடுபயிர் கோடைகால பயிர் மற்றும் மாற்று சாகுபடி உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் விதமாக நாகை மாவட்டத்தில் சரியான கட்டமைப்பு இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றன இந்த நிலையில் மாவட்டத்தில் திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு உள்ளிட்ட ஒன்றியங்களில் பருத்தி சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக பெருங்கடம்பூர், வங்காரமாவடி, கோகூர், பட்டமங்கலம் காக்கழனி, திருக்குவளை, ஆந்தகுடி , திருபஞ்சனம் ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் வேளாண்மை துறை சார்பில் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஏக்கருக்கு 30, 000 செலவு செய்து பருத்தி சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில் கோடை மழையால் பல்வேறு இடங்களில் பருத்தி சாகுபடி பாதிப்படைந்துள்ளது அதனையும் வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி