தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி நாகப்பட்டினத்தில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது குறிப்பாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கல்லார், அக்கரைப்பேட்டை, கீழ்வேளூர், ஒக்கூர், கடம்பங்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது நாகையில் கடும் வெயில் வாட்டிய நிலையில் தற்போது பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது