நாகை பெரிய கடை வீதியில் நோய் பரவும் அபாயம்

583பார்த்தது
நாகையில் பரபரப்பாக இயங்கக்கூடிய பெரிய கடை வீதியில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பரபரப்பாக இயங்கக்கூடிய பெரிய கடை வீதியில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், நகைக்கடை மார்க்கெட், ஜவுளி கடை மார்க்கெட், என அத்தியாவசிய தேவைக்கான அனைத்து கடைகளும் பெரிய கடை வீதியை சுற்றி அமைந்துள்ளது.

இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் கழிவுநீர் சாலைகளில் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழி இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி