அரசு ஊழியர்கள் சங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று மறியல் போராட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய பெண் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பாதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் ஆட்சியர் அலுவலக வாயில் வரை பேரணியாக வந்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.