சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
நாகையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப்பணி தடுப்பூசி பணி மற்றும் குடும்ப நலப் பணிகள் நடைபெற உரிய உத்திரவு வழங்க வேண்டும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக அரசு ஆணைக்கு எதிராக இதர பணிகளில் குறிப்பாக கணினி பணிக்கு உட்படுத்துவதையும் மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் கைவிட்டு கணினி பணியை மேற்கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டேட்டா என்ட்ரி ஆப்டர் ஆபரேட்டரை நியமிக்க வேண்டும் பதவி உயர்வை முறைப்படுத்தி துறையில் ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவது போல் பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கி ஆண் பெண் பாலின பாகுபாட்டை களைய வேண்டும் இதற்கென அரசு ஆணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாகை மாவட்ட தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையில் வலியுறுத்தி ஓசைகளை எழுப்பினர்

தொடர்புடைய செய்தி