திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
தமிழகத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய தவறிய ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திருவாசல் அருகே ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தைப் புறகணிப்பு செய்த ஒன்றிய அரசைக் கண்டித்து நாகை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் தலைமையிலும் தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் நெல்லித் தோப்பு புகழேந்தி, தட்கோ தலைவர் மதிவாணன் முன்னிலையிலும் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி